குமாரபாளையத்தில் பறக்கும் படையினரையும் மீறி பரிசுப் பொருட்கள் விநியோகம்

குமாரபாளையத்தில் பறக்கும் படையினரையும் மீறி பரிசுப் பொருட்கள் விநியோகம்
X

குமாரபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர்.

குமாரபாளையத்தில் பறக்கும் படையினரையும் மீறி புடவைகள், பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலையொட்டி செயல்படுத்தப்பட்ட பணிகளில் வாகன சோதனையும் ஒன்று. பறக்கும் படை என்ற பெயரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக 24 மணி நேரமும் 3 குழுக்களாக நகர் முழுவதும் கண்காணித்து வந்தனர்.

33 வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேச்சையினர் என பல வேட்பாளர்கள் புடவை, கொலுசு, பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. பறக்கும் படையினர் 24 மணி நேரமும் நகரை வலம் வந்தும் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது பரிசுப் பொருட்கள் வழங்காத வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் அருகே பறக்கும்படை இருந்தும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்ததை கண்டித்து படைவீடு பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!