குமாரபாளையம் அருகே திமுகவினர் 100 நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்

குமாரபாளையம் அருகே திமுகவினர் 100 நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்
X

குமாரபாளையம் அருகே தி.மு.க. சார்பில் கோட்டைமேடு பகுதியில் 100 நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. 

குமாரபாளையம் அருகே தி.மு.க. சார்பில் 100 நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

தி.மு.க. அரசு பதவியேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி மாநிலம் முழுதும் 100 நாள் சாதனை விளக்கக் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பள்ளிபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் குப்பாண்டபாளையம் ஊராட்சி, கோட்டைமேடு பகுதியில் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் தலைமையில் வார்டு வாரியாக 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

சாந்தபுரி, பூலக்காடு, எம்.ஜி.ஆர்.நகர் பகுதி, கத்தேரி பிரிவு, கோட்டைமேடு மேம்பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி