சமயபுரம் மாரியம்மன் திருவிழா அன்னதானம்
குமாரபாளையத்தில் நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருவிழாவில் அம்மன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சமயபுரம் மாரியம்மன் திருவிழா அன்னதானம்
குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனியில் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கை மாதம்மாள் தலைமையில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். 16வது ஆண்டு திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், அம்மன் திருவீதி உலா வைபவம் நடந்தது. இதில் பச்சை கரகம், பூங்கரகம் எடுத்து அம்மனை அழைத்து வந்ததுடன், நவசக்தி வேடங்கள் போட்டவாறும், மாகாளி வேடம் போட்டவாறும், அக்னி கரகம் எடுத்தவாறும் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
மேற்கு காலனி பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. நேற்று காலை மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை பூத பலி பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று இரவு மேற்கு காலனி பகுதியில் தெருக்கூத்து நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu