குமாரபாளையத்தில் 736 புதிய ஸ்மார்ட் கார்டு வினியோகம்
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய ஸ்மார்ட் கார்டுகளை பயனாளிகளுக்கு சிவில் சப்ளை ஆர்.ஐ.ராஜன் வழங்கினார்.
குமாரபாளையத்தில் 736 புதிய ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டது.
குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 105 ரேசன் கடைகள் உள்ளன. இவைகளில் அனைத்து கடைகளிலும் ரேசன் பொருட்கள் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சமயங்களிலும் தாமதமில்லாமல் ரேசன் பொருட்கள் வினியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2021 நவம்பர், டிசம்பர், 2022 ஜனவரி, ஆகிய மாதங்களில் புதிய ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பித்த 736 நபர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் வினியோகிக்கப்பட்டன. சிவில் சப்ளை ஆர்.ஐ. ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu