குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்
X
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றும் தபால் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றும் தபால் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிடுகின்றனர். பிப்.19ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தேர்தல் பணியாற்றியவர்கள் தபால் ஓட்டுக்களை சமர்பிக்க குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட பெட்டி நேற்றும் போலீஸ் காவலுடன் வைக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று பலரும் தங்கள் தபால் ஓட்டுக்களை போட்டு சென்றனர். நகராட்சி பணியாளர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான பணிகளை செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!