குமாரபாளையத்தில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு

குமாரபாளையத்தில்  டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு
X
குமாரபாளையத்தில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொரானா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. குமாரபாளையம் நகராட்சி சார்பில் குமராபாளையம் பேருந்து நிலையம், காய்கறி சந்தை, வணிக வளாகங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கபட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஸ்டேன்லி பாபு கூறியபொழுது தமிழக அரசு மற்றும் நாமக்கல் மாவட்ட மருத்துவ குழு அறிவுறுத்தலின்படி குமாரபாளையத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டேங்கர் லாரிகள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணியானது குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்