ஜே.கே.கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நீர் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த கலந்துரையாடல்!
நிகழ்வின் தலைப்பு : நீர் தூய்மை மற்றும் சுகாதாரம்.
நிகழ்விடம் : நடராஜா வித்யால்யா அவைக்களம்
நிகழ்ச்சி நடக்கும் தேதி : அக்டோபர் 28/10/2023
நிகழ்ச்சி நடக்கும் நேரம் : 1.30பி.ப-4:00பி.ப
தலைமை : திருமதி.ந.செந்தாமரை, தாளாளர்அவர்கள்,ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்கள்
முன்னிலை : திரு.ஓம் சரவணா, நிர்வாக இயக்குநர் அவர்கள்,ஜே.கே.கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வரவேற்புரை:
ச.க.மிரிட்டிகா, ஆறாம் வகுப்பு அ-பிரிவு,
ஜே .கே. கே நடராஜா வித்யால்யா, குமாரபாளையம்
படிப்பு விவரம்:
நீர் தூய்மை மற்றும் சுகாதாரம் :*
நீர் தூய்மையாக்கம் என்பது நீரில் உள்ள மாசுகளை அகற்றி மனிதர்களின் குடிநீர் தேவைக்கு பொருத்தமான அளவுக்கு அதனை தூய்மையாக்குவதையோ அல்லது தொழில்துறை தேவைக்கு ஏற்ப அவற்றை தூய்மைப்படுத்துவதையோ குறிக்கும்.சுகாதாரம் என்பது சுத்தமான பொது வான மனித சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றை பாதுகாப்பாக அகற்றுவதற்கான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதை குறிக்கிறது.
பாட அவுட்லைன்:
அ.நீர் தூய்மையின் முக்கியத்துவம் .
ஆ.நீர் தொடர்பானபேரழிவுகள்.
இ.நீர் பாதுகாப்பு.
அ.நீர் தூய்மையின் முக்கியத்துவம்:
மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் குடிநீர் என்பது இன்றியமையாதது ஆகும். உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70% நீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. எனவே நீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆ. நீர் தொடர்பான பேரழிவுகள்:
பெரும்பாலான பேரழிவுகள் நீர் தொடர்பானவை.காலநிலை மாற்றத்தின் விளைவாக புயல், வெள்ளம்,காட்டுத்தீ, நிலச்சரிவு , வறட்சி, மற்றும் கடுமையான குளிர் போன்றவை ஏற்படுகின்றன . அதனால் நீர் மற்றும் துப்புரவு போன்றவற்றில் பின்னடைவு ஏற்படும் . அதனால் தொற்று நோய் ஏற்படும்.
*இ. நீர் பாதுகாப்பு
பூமியில் உள்ள உயிரினங்களுக்கு உயிர் நாடியாக இருப்பது நீர்.பூமியில் சுமார் 71%நீர் உள்ளது.விவசாயத்திற்கு அடிப்படை நீர்.பூமிக்கு நீர் கிடைக்க மூலதனம் மழை.ஆறு, குளம்,ஏரி போன்றவை நீரின் மூலம் ஆகும்.
சுருக்கம்:
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியமானது நீர்.நான்கில் மூன்று பங்கு நீர் இருப்பினும் மனித உயிரினங்களின் தேவைக்கு பயன்படும் நன்னீரின் அளவு குறைவு.பெருமளவு மனித உணவுத் தேவையை நிறைவு செய்வது விவசாயம் என்பதால் நீர் மிகவும் முக்கியமானது ஆகும்.நீரின் முக்கிய ஆதாரமாக இருப்பது மழைநீர்.மழைநீரின் மூலம் ஆறு,ஏரி, குளம்,குட்டை போன்றவை நிரம்புகின்றது.நீரை பாதுகாப்பது நமது கடமையாகும்.அதனை அசுத்தம் செய்யக்கூடாது.
நன்றியுரை: க.அக்ஷ்சயா
ஆறாம் வகுப்பு ஆ- பிரிவு,
நடராஜா வித்யால்யா.
பங்கு பெறுவோர் விபரம் :
ஆறாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் . நடராஜா வித்யால்யா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu