குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பக்தர்கள் மகா குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்,
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் நடந்த மகா குண்டம் திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்.
குமாரபாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் பண்டிகையையொட்டி மகா குண்டம் இறங்குதல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தான காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழா பிப். 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பிப். 20, மறு பூச்சாட்டுதல், பிப் 24ல் கொடியேற்றம் என தினசரி ஒரு விழா நடந்தது. விழாவின் 15ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழா நடந்தது.
கடந்த 15 நாட்களாக கடுமையான விரதம் இருந்து, மஞ்சள் நிற ஆடை அணிந்த ஆண்களும், பெண்களும் அதிகாலை காவிரியில் புனித நீராடி பங்கேற்ற சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி சதாசிவம் முதன் முதலாக பூங்கரகத்துடன் குண்டம் இறங்கினார். அதன்பின் ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடனும், குண்டம் இறங்கினர். மாலையில் பொங்கல் விழா நடந்தது. குமாரபாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாக்குழுவினர் அதிருப்தியான நிலையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.
இதே போல் குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பிப். 13ல் பூச்சாட்டப்பட்டு, நேற்று மகா குண்டம் இறங்குதல் விழா நடந்தது., இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிப் 13 முதல் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி காளிமுத்து உள்பட நிரவாகிகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu