நுகர்வு மற்றும் உற்பத்தியின் வளர்ச்சி - ஜேகேகேஎன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு
நிகழ்வின் தலைப்பு : நுகர்வு மற்றும் உற்பத்தியின் வளர்ச்சி
நிகழ்விடம் : நடராஜா வித்யாலயா அவைக்களம்
நிகழ்ச்சி நடக்கும் தேதி : 12 ஆகஸ்ட் 2023
நிகழ்ச்சி நடக்கும் நேரம் : 10:மு.ப-12:00மு.ப
தலைமை : திருமதி.ந.செந்தாமரை, தாளாளர்,ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்கள்
முன்னிலை : திரு.ஓம் சரவணா, நிர்வாக இயக்குநர் ஜே.கே.கே நடராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி
வரவேற்புரை: இன்பதமிழ்.சு.ச
பதினொன்றாம் வகுப்பு இ-4 பிரிவு
ஜே கே கே நடராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி குமாரபாளையம்
1. நுகர்வு அறிமுகம்:
. நுகர்வு ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகும்.
2. உற்பத்தி பகுப்பாய்வு:
. உற்பத்தி என்பது பல்வேறு வகையான இடுப்பொருட்களை பயன்படுத்தி இறுதி பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வுக்காக வழங்குதல் ஆகும். உற்பத்தி என்பது பொருளாதார நலத்தை உருவாக்குவதாகும் தேவைகள் உற்பத்தியின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன
பாட அவுட்லைன்:
பண்டங்கள் மற்றும் பணிகளை பயன்படுத்துவதன் மூலம் விருப்பங்கள் நிறைவடையும். மனித விருப்பங்கள் பொதுவாக ஆசையும் விருப்பமும் ஒன்றோடு ஒன்று கருதப்படுகின்றன ஆனால் பொருளியலில் அவை வெவ்வேறு பொருளுடையன ஆகும் பண்டத்தை வாங்கும் மற்றும் நுகரும் நடத்தை மனித விருப்பத்தைச் சார்ந்தது.
உற்பத்தி என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது உற்பத்தியின் அளவு உற்பத்தி செலவினை தீர்மானிக்கிறது பேரளவு உற்பத்தி இருக்கும்போது உற்பத்திக்கான சராசரி செலவு குறையும் இதன் காரணமாகவே தொழில் முனைவோர் அவர்களின் உற்பத்தி பொருட்களை அதிகரிக்க ஆர்வம் காட்டுவர்.
சுருக்கம்:
உற்பத்தி காரணிகள் என்பது பண்டங்களை உற்பத்தி செய்யப்படும் வளங்கல் ஆகும் இது நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது நிலம் ,உழைப்பு ,மூலதனம் ,மற்றும் அமைப்பு அல்லது தொழில் முனைதல். மனித விருப்பங்கள் எண்ணற்றவை விருப்பங்கள் பழக்கவழக்கங்களாக மாறும், விருப்பங்கள் நிறைவேற கூடியவை ,விருப்பங்கள் மாற்றுக் பொருளால் நிறைவு பெறுபவை ,விருப்பங்கள் போட்டியிடுபவை, விருப்பங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன ,விருப்பங்கள் மீளத் தோன்றுபவை.
நன்றியுரை:
ரா.அமிர்தா
பதினொன்றாம் வகுப்பு இ -4 பிரிவு
ஜே கே கே நடராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி
பங்கு பெறுவோர் விபரம் : பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள்..
ஜே.கே.கே.நடராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu