/* */

சாயப்பட்டறைகளில் ஆசிட் ஊற்றி நூல்கள் அழிப்பு: மாசுக்கட்டுபாட்டு வாரியம் அதிரடி

குமாரபாளையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தினர் ஆசிட் ஊற்றி நூல்களை அழித்தனர்.

HIGHLIGHTS

சாயப்பட்டறைகளில் ஆசிட் ஊற்றி நூல்கள் அழிப்பு: மாசுக்கட்டுபாட்டு வாரியம் அதிரடி
X

குமாரபாளையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தினர் ஆசிட் ஊற்றி நூல்களை அழித்தனர்.

குமாரபாளையத்தில் குடிநீரில் சாய நீர் கலந்து ஊரின் பல பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மாசுக்கட்டுப்பாடு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 5 சாயப்பட்டறைகளில் மீண்டும் சாயம் போடும் பணிகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சாயம் போடப்பட்ட நூல்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர் செல்வகுமார் கூறுகையில், குமாரபாளையம் நகரில் சின்னப்பநாயக்கன் பாளையம், நடராஜா நகர், சுந்தரம் நகர், திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பல இடங்களில் விதி மீறி செயல்பட்ட பல சாயப்பட்டறைகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இதில் 5 சாயப்பட்டறைகள் மீண்டும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் சாயம் போடப்பட்ட நூல்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டது. இனி இதுபோல் விதி மீறும் சாயபட்டறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 6 Jan 2022 1:45 PM GMT

Related News