வெறிச்சோடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்: பொதுமக்கள் அதிர்ச்சி

வெறிச்சோடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்: பொதுமக்கள் அதிர்ச்சி
X

மோகன், நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர்.

குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட அலுவலரை தவிர பிற பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட அலுவலரை தவிர பிற பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்ட அலுவலராக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், மோகன் என்பவர் ஒரு மாதம் முன்பு பணியில் சேர்ந்தார்.

இதுகுறித்து மோகன் கூறுகையில், குமாரபாளையத்தில் செயல்பட்டு வந்த நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக உதவி பொறியாளர்களான கிருஷ்ணன், தீனதயாளன் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், கிருஷ்ணன் நாமக்கல்லுக்கும், தீனதயாளன் ஓசூருக்கும் செல்லவுள்ளனர். இவருக்கு பதிலாக குணசேகரன் என்பவர் குமாரபாளையம் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவரும் விடுப்பில் சென்றுள்ளார் என தெரிவித்தார்.

அலுவலர்கள் இருந்த போதே, சில சாயப்பட்டறையினர் கழிவுநீரை பகல், மற்றும் இரவு நேரங்களில் விட்டு காவிரி ஆற்றினை மாசுபடுத்தி வந்தனர். இப்போது அலுவலர்கள் யாரும் இல்லாத நிலையில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலகம் இனி எவ்வாறு செயல்பட உள்ளது? என்பதும், கழிவுநீரை விட்டு காவிரியை மாசு படுத்தி வரும் நபர்களின் செயல்பாடுகள் இனி எவ்வாறு விதி மீறிய செயலாக இருக்கப்போகிறது? என்பதும் புரியாத புதிராக உள்ளது. குடிநீரை காக்க உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story