மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வராமல் வெறிச்சோடிய நகராட்சி அலுவலகம்

மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வராமல் வெறிச்சோடிய நகராட்சி அலுவலகம்
X

வெறிச்சோடி காணப்பட்ட குமாரபாளையம் நகராட்சி அலுவலகம்.

குமாரபாளையத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வராமல் நகராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திட தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெற அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். தை அமாவாசை நாளில் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணி கட்சியினருக்கு சீட் பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இனி வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி அலுவலகம் நுழைவு பகுதியில் கிருமிநாசினி மருந்து, வெப்பமானி ஆகியவற்றை வைத்து நகராட்சி அலுவலகத்திற்குள் செல்வோரை பரிசோதனை செய்தனர்.

Tags

Next Story
photoshop ai tool