பெண்கள் அழகு நிலையம், விடுதிகளில் டி.எஸ்.பி., ஆய்வு..!
குமாரபாளையம் விடுதிகளில் போலீசார் ஆய்வு செய்தனர்.
பெண்கள் அழகு நிலையம், விடுதிகளில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆய்வு நடத்தப்பட்டது.
குமாரபாளையம் பெண்கள் அழகு நிலையம், விடுதிகளில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
குமாரபாளையம் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையம், விடுதி உள்ளிட்ட இடங்களில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ.க்கள் சதீஷ்குமார், பிரவீன்குமார், உள்ளிட்ட போலீசார் குமாரபாளையம் நகரில் உள்ள பெண்கள் அழகு நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். புகார் வந்தது போல் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்று துன்பப்படும் நபர்கள், குமாரபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்க வேண்டி, இன்ஸ்பெக்டர் தவமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
குமாரபாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாராவது, வட்டிக்கு பணம் பெற்றும், வட்டி செலுத்த முடியாமல் துன்பப்படுவதாக இருந்தாலும், ஆன்லைன் மூலம் பணம் பெற்று துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும், அல்லது வேறு வகையில் அதிக வட்டிக்கு பணம் பெற்று துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் மற்றும் எவ்வித பிரச்சனையாக இருந்தாலும், உடனே குமாரபாளையம் காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu