குமாரபாளையம் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு

குமாரபாளையம் காவல் நிலையத்தில் கிருமி நாசினி புகை மருந்து அடிக்கப்பட்டது.
கொரோனா மூன்றாம் அலை பரவல், ஒமைக்ரான் நோய் தொற்று, தமிழகத்தில் பரவுவதாக வெளியாகும் தகவல் மக்களை கவலை அடையச் செய்துள்ளது. இதனிடையே, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மருந்து பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், தாலுக்கா அலுவலக நிர்வாகம், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட பல பொதுநல அமைப்பினரும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு அலுவலர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் அவசியம் என்று, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, தாலுக்கா அலுவலகம், நூலகம், ஆர்.ஐ. அலுவலகம், வி.ஏ.ஒ. அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி புகை அடிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu