குமாரபாளையத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்: நகராட்சி சுறுசுறுப்பு

குமாரபாளையத்தில் டெங்கு ஒழிப்பு பணியில், நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், டெங்கு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, பணியாளர்கள், பழைய டயர்களை சேகரித்தனர்.

இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: பருவமழை தினமும் பெய்து வருவதால் டெங்கு, மலேரியா நோய் தோற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரபாளையம் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று சென்று நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன், வெப்பமானி கொண்டு காய்ச்சல் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று வராமல் பாதுகாக்கவும், முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்து பயன்படுத்திட வேண்டியும், தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள பாத்திரங்கள், உடைந்த மண் பானைகள், வாகன டயர்கள் ஆகியவை அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.-க்கள் செல்வராஜ், சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future