குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு தினம் அனுஷ்டிப்பு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு தினம் அனுஷ்டிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு தினம் அனுஷ்டிப்பு நிகழ்வில் இயற்கை நோய் எதிர்ப்பு குடிநீரை முன்களப் பணியாளர்களுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் விநியோகம் செய்து நிகழ்வை துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு தினம் அனுஷ்டிப்பு நிகழ்வு நகராட்சி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு தினம் அனுஷ்டிப்பு நிகழ்வு நகராட்சி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. இயற்கை நோய் எதிர்ப்பு குடிநீரை முன்களப் பணியாளர்களுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் விநியோகம் செய்து நிகழ்வை துவக்கி வைத்தார்.

டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழியை தனியார் கல்லூரி டாக்டர் மோகன்குமார் வாசிக்க, தனியார் கல்லூரி மாணவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

உறுதி மொழியில், எனது வீட்டிலோ, சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், போன்ற பொருட்களை போடமாட்டேன். வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், ஆகியவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைப்பேன்.நான் கற்றுக்கொண்டவற்றை அண்டை, அயலாருக்கும் கற்றுக்கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசு உருவாகாமல் பார்த்து கொள்வேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story