ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலைய நிறுவனர் பிறந்த நாளையொட்டி டெங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலைய நிறுவனர் பிறந்த நாளையொட்டி டெங்கு விழிப்புணர்வு  சைக்கிள் பேரணி
X
குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலைய நிறுவனர் பிறந்த நாளையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலைய நிறுவனர் பிறந்த நாளையொட்டி டெங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலைய நிறுவனர் பிறந்த நாளையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலைய நிறுவனர் நடராஜாவின் பிறந்த நாளையொட்டி டெங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியை கல்லூரி தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா கொடியசைத்து துவக்கி வைத்தனர். சங்கமேஸ்வரர் ஆலயம் முன்பு துவங்கிய பேரணி, காவிரி பழைய பாலம், பாலக்கரை, சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் பிரிவு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, ஆனங்கூர் பிரிவு, நடராஜா நகர் வழியாக தனியார் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் சைக்கிளில் வைத்து சென்றவாறும். விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!