பள்ளிபாளையம் அருகே சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் அருகே சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

பள்ளிபாளையம் அருகே வெப்படையில் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் சி.பி.எம். சார்பில், வெப்படை நான்கு ரோடு பகுதியில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும், உயர்த்தப்பட்ட சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டியும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறித்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சண்முகம், தனேந்திரன், மணிகண்டன், சண்முகம்,தேவராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!