சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
X

படவிளக்கம் :

சட்டவிரோத சாய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில்,ம.தி.மு.க மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சட்டவிரோத சாய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், ம.தி.மு.க மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத சாய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில்,

ம.தி.மு.க மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில்,

ம.தி.மு.க மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு ரமேஷ் தலைமை தாங்கினார் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமாக பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வரும் நிலையில் அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கும் சாய ஆலைகளில் இருந்து, இரவு நேரத்தில் சாக்கடை கால்வாய் வழியாக கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆறு மாசுபட்டு வருகிறது. காவிரி ஆற்று நீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தோல் அலர்ஜி ,கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதியில் முழுவதும் தொடர்ந்து சாயக் கழிவுகளை வெளியேற்றி ,காவிரி ஆற்றை மாசு படுத்தி வரும் சாயப்பட்டறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்து படியே கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
சூர்யா 45 பட அப்டேட்ட தொடர்ந்து அவரோட ஃபிட்னஸ் சீக்ரட்டும் டயட் பிளேனும் வெளியாகியிருக்கு..!