குமாரபாளையத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

சி.பி.எம். சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையத்தில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வை கைவிட வேண்டும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை உடனே நிறுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை முறைப்படுத்த வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க, தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி சி.பி.எம். சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர செயலர் சக்திவேல், நகர முன்னாள் செயலர்கள் பாலுசாமி, ஆறுமுகம், நிர்வாகிகள் சண்முகம், கந்தசாமி, காளியப்பன், பெருமாயி, மாதேஸ் உள்பட பலர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முழங்கினர். கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!