மின் இணைப்பு வழங்காததால் குமாரபாளையம் அருகே கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை ஊராட்சிக்குட்பட்ட ரங்கனூர் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பேட்ச் அணிந்தும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
TNEB Tamil - குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை ஊராட்சிக்குட்பட்ட ரங்கனூர் பகுதியில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு பல வருடங்களாக கேட்டும் இதுவரை வழங்கபடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பேட்ச் அணிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. மகாலட்சுமி, தாசில்தார் தமிழரசி நேரில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிட வைத்தனர். ஓரிரு நாட்களில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தமிழரசி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu