அனைத்து ஜாதி அர்ச்சகர்களுக்கும் பணி கோரி குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

அனைத்து ஜாதி அர்ச்சகர்களுக்கும் பணி கோரி குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
X

தெய்வத்தமிழ் பேரவை சார்பில் குமாரபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

அனைத்து ஜாதி அர்ச்சகர்களுக்கும் பணி வழங்கக்கோரி, தெய்வத்தமிழ் பேரவை சார்பில், குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தெய்வத்தமிழ் பேரவை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமாரபாளையம் நகர அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில், ஆனங்கூர் பிரிவு சாலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வேள்விச்சாலை, கோவில் கலச குடமுழுக்கு ஆகியன, தமிழ் மந்திரங்களில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், மாவட்டம் தோறும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி நிறுவப்பட வேண்டும், பயிற்சி முடித்த அனைத்து ஜாதி அர்ச்சகர்களுக்கும் பணிகள் வழங்கப்பட வேண்டும், அறநிலையத்துறைக்கு வெளியில் உள்ள கோவில் பூசாரிகளுக்கும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, கண்டன கோஷங்கள் எழுப்பினர். மதிமுக விஸ்வநாதன், மக்கள் நீதிமய்யம் சரவணன், சித்ரா, வக்கீல்கள் பாரதி, கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!