குமாரபாளையத்திலிருந்து திருச்செங்கோட்டிற்கு பேருந்துகளை அதிகரிக்க கோரிக்கை

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் 8 என்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ் திருச்செங்கோடு செல்வதால், அதில் இடம் பிடிக்க கூட்டம் அலைமோதுகிறது.
Namakkal District News-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் கைத்தறி, விசைத்தறி, சாயப்பட்டறை, தானியங்கி விசைத்தறி உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பவானி, சங்ககிரி, திருச்செங்கோடு, வெப்படை, உள்ளிட்ட பல பகுதியில் இருந்து பொதுமக்கள் வேலைக்கு வருகின்றனர்.
குமாரபாளையம் நகரில் இருந்து 8 என்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ் திருச்செங்கோடு செல்கிறது. இது குறைந்த அளவே செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு முறை இந்த பஸ், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வரும் போதும் அதில் பயணம் செய்ய பயணிகள் முண்டியடித்துச் சென்று இடம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புறங்களிலிருந்து காய்கறிகள், தயிர், பால் ஆகியனவும் கொண்டு விற்பனை செய்வதால், அதிகாலை நேரங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி திருச்செங்கோட்டிற்கு அதிக பஸ்கள் விட கோரிக்கை எழுந்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu