குமாரபாளையத்தில் மின் பராமரிப்பு பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி
பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மின்வாரிய அலுவலகம் சார்பில் மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் காலை 09:00 மணி முதல் 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் சில மாதங்களாக மின்வாரியம் அறிவிக்கும் கால நேரத்திற்கும், மீண்டும் மின் இணைப்பு கொடுக்கும் கால நேரத்திற்கும் மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இன்று பராமரிப்பு பணிக்காக காலை 09:00 மணிக்கு குமாரபாளையம் மற்றும் தட்டான்குட்டை, சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
மின்வாரியத்தால் மின் இணைப்பு கொடுக்கப்படும் நேரம் மாலை 02:00 மணி என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் குமாரபாளையம் நகர் பகுதியில் மாலை 06:45 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர், சத்யா நகர், எதிர்மேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10:00 மணி வரையிலும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் அப்பகுதியில் உள்ள பல தொழில் நிறுவனத்தார், வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
போதிய ஆட்கள் இல்லாமல் கால தாமதம் ஏற்படுகிறதா? அல்லது அலட்சியத்தின் காரணமாக மின் இணைப்பு வழங்க கால தாமதம் ஏற்படுகிறதா? என மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை செய்து உரிய நேரத்தில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல இடங்களில் மின் மீட்டரில் கணக்கீடு செய்யாமல் பழைய தொகையையே செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த மன வேதனை அடையும் நிலை ஏற்படுகிறது. போதிய ஆட்களை நியமித்து, உரிய காலத்தில் மின் பயன்பாடு குறித்து அளவீடு செய்து அந்தந்த மாதத்திற்குரிய தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu