குமாரபாளையம் கோவில்களில் தீபாவளி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம்  கோவில்களில் தீபாவளி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்
X

குமாரபாளையம் கோட்டைமேடு, அலாங்காட்டுவலசு கற்பக விநாயகர் கோயிலில் சுவாமி சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் கோவில்களில் தீபாவளி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தீபாவளி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், செல்லியாண்டியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில், குமாரபாளையம் காளியம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அதேபோல் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், லட்சுமி நாராயண சுவாமி கோவில் பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன், கோட்டைமேடு ஆலாங்காட்டுவலசு கற்பக விநாயகர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!