கார்த்திகை தீப விழாவையொட்டி குமாரபாளையத்தில் விளக்கு விற்பனை ஜோர்

கார்த்திகை தீப விழாவையொட்டி  குமாரபாளையத்தில் விளக்கு விற்பனை ஜோர்
X

குமாரபாளையம் கடைவீதிகளில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. 

கார்த்திகை தீப விழாவையொட்டி, குமாரபாளையத்தில் அகல் விளக்கு விற்பனை ஜோராக நடைபெற்றது.

மகா கார்த்திகை தீப திருவிழா, நவ. 19ல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் உள்ள விளக்குகள் விற்கும் கடையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் விளக்குகளை வாங்கி சென்றனர். ஒரு முகம் சிறிய விளக்கு, பெரிய விளக்கு, பஞ்சமுக விளக்கு, சர விளக்கு உள்ளிட்ட பல வகைகளில் விளக்குகள் விற்பனைக்கு விற்கப்பட்டன.

இது பற்றி விளக்கு விற்பனையாளர் சக்திவேல் கூறியதாவது: தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்று. பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இறைவனை வணங்குவது சிறந்தது என்று அனைவரும் கூறி வருகிறார்கள். இதனை ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் தங்கள் வீடுகளின் முன்பு தீபங்கள் ஏற்றி வைத்து, சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!