அரசு கலைக்கல்லூரியில் காமராஜ் பட்டிமன்றம்..!

அரசு கலைக்கல்லூரியில் காமராஜ் பட்டிமன்றம்..!
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜ் பிறந்த நாளையொட்டி பட்டிமன்றம் நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜ் பிறந்த நாளையொட்டி பட்டிமன்றம் நடந்தது.

அரசு கலைக்கல்லூரியில் காமராஜ் பட்டிமன்றம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜ் பிறந்த நாளையொட்டி பட்டிமன்றம் நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜ் பிறந்த நாளையொட்டி பட்டிமன்றம் நடந்தது. முதல்வர் ரேணுகா நடுவராக பங்கேற்றார். பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், மகாலிங்கம், ஞானசேகரன், ராஜேஸ்வரி ஆகியோர் பேசினார்கள். காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேராசிரியர் ரகுபதி பங்கேற்று, காமராஜர் புகழ் குறித்து பேசினார். மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.


குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம் இறுதியாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கான கிராபிக் டிசைன் மற்றும் மல்டி மீடியா பயிற்சி வகுப்பு துவக்க விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. இவர் பேசியதாவது:

கிராபிக் டிசைன் மற்றும் மல்டி மீடியா துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் அறிந்து, பயன்பெற வேண்டும். மாணவ, மாணவியர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்காக செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பெங்களூர், தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி சங்கர் பங்கேற்று, இந்த பயிற்சியினை வழங்கினார்.இதில் வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, ஆங்கிலத்துறை தலைவர் பத்மாவதி, பேராசிரியர்கள் சண்முகாதேவி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai devices in healthcare