சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி மகள்கள் கார் விபத்தில் படுகாயம்

சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி மகள்கள்   கார் விபத்தில் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே சாலை விபத்தில் சேதமான கார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகள்கள் கார் விபத்தில் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தேவி. இவரது மகள்கள் ஜெயரிதா (வயது19, ),சென்னை சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். ஜெயசஷ்டிகா(வயது 11.) 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று மாலை 05:30 மணியளவில் சங்ககிரியிலிருந்து குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை மூத்த மகள் ஜெயரிதா ஓட்ட, இளைய மகள் முன்புறம் அமர்ந்திருந்தார்.

எஸ்.எஸ்.எம். கல்லூரி அருகே வரும்போது கார் முன்புற டயர் வெடித்ததில், கார் கோவையிலிருந்து சேலம் செல்லும் சாலையில் தூக்கி வீசப்பட்டு விழுந்தது. அந்த சாலையில் வேகமாக வந்த டிப்பர் லாரி, மினி டெம்போ கார் மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் தேவி குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!