குமாரபாளையத்தில் சாய்ந்த மரக்கிளை - வாகன ஓட்டிகளின் உயிருக்கு உலை?

குமாரபாளையத்தில் சாய்ந்த மரக்கிளை - வாகன ஓட்டிகளின் உயிருக்கு உலை?
X

குமாரபாளையத்தில், பள்ளிபாளையம் சாலையில்.  சாய்ந்த மரக்கிளையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில், சாய்ந்த மரக்கிளையால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் சாலையில், கே.ஒ.என். பஸ் நிறுத்தம் அருகில், சாலையோரம் உள்ள மரம் ஒன்று, கிளை முறிந்து, எந்நேரமும் கீழே விழுந்து சாயும் நிலையில் உள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பவானி, சேலம், ஈரோடு, பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. விசைத்தறி, கைத்தறி, ஸ்பின்னிங் மில்கள் அதிகமு உள்ள இந்த பகுதியில் லாரி, டெம்போக்கள் உள்ளிட்ட வாகனஙகளும் அதிகம் சென்று வருகின்றன. அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த வழியில்தான் சென்று வருகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
ai based healthcare startups in india