உயிருக்கு ஆபத்து: 7 திமுக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் முறையீடு

உயிருக்கு ஆபத்து: 7 திமுக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் முறையீடு
X
குமாரபாளையத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு 7 திமுக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார்.

குமாரபாளையத்தில் நடைபெறவுள்ள நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழாவில் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு 7 திமு.க. கவுன்சிலர்கள் கலெக்டர் மற்றும் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இது பற்றி தி.மு.க.வில் வெற்றி பெற்ற கவுன்சிலரும், முன்னாள் நகர தி.மு.க. செயலருமான வெங்கடேசன் கூறியதாவது:

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 எனும் வகையில் வெற்றி கிடைத்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கவுன்சிலர்களை சமூக விரோதிகள் துணையுடன் கடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பதவியேற்பு விழாவில் தி.மு.க. கவுன்சிலர்களான வெங்கடேசன், ஜேம்ஸ், கோவிந்தராஜ், தர்மராஜ், கிருஷ்ணவேணி, சியாமளா, மகேஸ்வரி ஆகிய எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களை கடத்தி செல்ல அனைத்து ஏற்பாடுகளும் நடத்து வருவதாக தெரிகிறது.

எங்களுக்கு பதவி பிரமாணம் முடிந்து வீட்டுக்கு சென்று சேரும் வரையிலும், மார்ச் 4ல் நடைபெறும் நகரமன்ற தலைவர் தேர்தல், நகரமன்ற துணை தலைவர் தேர்தலில் பாதுகாப்பு வழங்க கலெக்டர், எஸ்.பி., இன்ஸ்பெக்டர், நகராட்சி கமிஷனர், தாசில்தார் உள்ளிட்ட அனைவரிடமும் நேரில் புகார் மனு கொடுத்து வந்துள்ளோம். மேலும் சில சுயேச்சை கவுன்சிலர்களும் புகார் மனு பதிவு தபாலில் அனுப்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!