குமாரபாளையம் அருகே சேதமடைந்த பாலம்; சீரமைக்கப்படாத அவலம்

குமாரபாளையம் அருகே சேதமடைந்த பாலம்; சீரமைக்கப்படாத அவலம்
X

சேதமடைந்துள்ள, வீரப்பம்பாளையம் பகுதி வாய்க்கால் பாலம்.

குமாரபாளையம் அருகே, சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் வாய்க்கால் பாலம் உள்ளது. இது, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தற்போது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த பாலமானது, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கிறது; அதிக போக்குவரத்து மிகுந்ததாகவும் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என பல தரப்பட்டவர்கள், இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பழுதாகியுள்ள இப்பாலம் உடைந்தால், பல கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது. உடனடியாக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology