தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்டில் ஆர்.டி.ஓ ஆய்வு
குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்டில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ இளவரசி ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனை சப் டிவிசன் செய்தல் மட்டுமே, மார்க்கெட் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.
தினசரி காய்கறி மார்க்கெட்ட்டில் கான்கிரீட் கட்டடங்கள் கட்டி, சிமெண்ட் தரை தளம் அமைத்து மேம்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளது. தற்போது கூரை கொட்டகை, சிமெண்ட் அட்டைகள் போட்ட கடைகள் என இருப்பதால் மழைக்காலங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
காய்கறிகளும் சேதமாகும் நிலை ஏற்பட்டு, வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் காய்கறிகள் பாதுகாத்திட குளிர்சாதன கிடங்கு அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே மார்க்கெட் மேம்பாடு பணிகள் நடந்திட இந்த இடத்தை சப் டிவிசன் செய்து தர கோரி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. இளவரசி நேரில் வந்து ஆய்வு செய்தார். இவருடன் தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களை ஆய்வு செய்த ஆர்.டி.ஒ. இளவரசி, மேற்கொண்டு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாசில்தார் தமிழரசி, உள்ளிட்ட வருவாய்த்துறையினரிடம் அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu