குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், நகர்நல மையத்துக்கு பூமி பூஜை

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், நகர்நல மையத்துக்கு பூமி பூஜை
X

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் நகர்நல மையம் பூமி பூஜை நடந்தது.

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் நகர்நல மைய பூமி பூஜை நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. மார்க்கெட் வளாகத்தில் பூமி பூஜை நகராட்சி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. சேர்மன் விஜய்கண்ணன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

பதினைந்தாவது மத்திய நிதி 2021-22ன் படி 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய காவேரி பாலம் அருகே நகர்நல மையம் அமைக்க பூஜை செய்யப்பட்டது. சேர்மன் விஜய்கண்ணன் பூமி பூஜை போட்டு கட்டுமான பணிகள் துவக்கி வைத்தார். பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், கோவிந்தராஜ், தர்மராஜன், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, நந்தினிதேவி, பூங்கொடி, சியாமளா, சுமதி, மகேஸ்வரி, புஷ்பா, தீபா, பாண்டிசெல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!