குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் நாளை (டிச. 29) விடுமுறை

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் நாளை (டிச. 29) விடுமுறை
X

குமாரபாளையம் தினசரி மார்க்கெட் - கோப்பு படம்

கோவில் பொங்கல் விழாவையொட்டி குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட், நாளை (டிச. 29 ) விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து, தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள புங்கமாரியம்மன் மற்றும் முத்து முனியப்பன் சுவாமிகளின், 32ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, நாளை டிச. 29 ம் தேதி புதன்கிழமை தினசரி மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்படுகிறது. மார்க்கெட் சங்க வியாபாரிகளும், விவசாய பெருமக்களும், சர்வ கட்சியினரும், ஊர் பொதுமக்களும், விழாவில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!