இரு அணியாக பிரிந்த தினசரி மார்க்கெட் சங்கம்

இரு அணியாக பிரிந்த தினசரி மார்க்கெட் சங்கம்
X

தினசரி காய்கறி மார்க்கெட், குமாரபாளையம்.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் இரு அணியாக பிரிந்தது.

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் பல வருடங்களாக கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் செயல்பட்டு வந்தது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கொமாரபாளையம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் உருவானது. இதன் தலைவராக துரைசாமி, செயலராக சீனிவாசன், பொருளராக தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இது பற்றி தலைவர் துரைசாமி கூறியதாவது:

தற்போதுள்ள குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு புதிய சங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு கூறிய விதிமுறைகளை கடைபிடித்து நாங்கள் வியாபாரம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



Tags

Next Story