/* */

குமாரபாளையத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி
X

நாமக்கல் மாவட்ட காவல்துறை, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் நடைபெற்ற சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் புகையிலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை ஏ.டி.எஸ்.பி. செல்லபாண்டியன் பங்கேற்று, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் புகையிலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி குமாரபாளையத்தில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஏ.டி.எஸ்.பி. செல்லபாண்டியன் பங்கேற்று, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு துவங்கிய பேரணி, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்று ராஜம் தியேட்டர் முன்பு நிறைவு பெற்றது. இதில் சைபர் கிரைம் மற்றும் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தவாறும் மாணவ, மாணவியர் வந்தனர்.

எஸ்.ஐ.க்கள் மலர்விழி, நந்தகுமார், மோகன், சிவகுமார், போக்குவரத்து எஸ்.ஐ. சண்முகம், போக்குவரத்து போலீசார் சுகுமார், சுரேஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வழி நெடுக பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த பேரணியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Updated On: 9 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’