சூப்பர் மார்க்கெட்டில் மொபைல் போன் திருடிய வாடிக்கையாளர்

சூப்பர் மார்க்கெட்டில் மொபைல் போன் திருடிய வாடிக்கையாளர்
X

பைல் படம்.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் மொபைல் போன் திருடிய வீடியோ அதிகம் பரவி வருகிறது.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 4 மணியளவில் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர், அங்குள்ள டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த பணியாளரின் ஸ்மார்ட் மொபைல் போனை திருடினார். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது வாடிக்கையாளர் மொபைல் போன் திருடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!