காளியம்மன் திருவிழாவையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிப்பு

காளியம்மன் திருவிழாவையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிப்பு
X

குமாரபாளையத்தில் காளியம்மன்,மாரியம்மன் திருவிழா வருவதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குமாரபாளையத்தில் காளியம்மன்,மாரியம்மன் திருவிழாவையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குமாரபாளையம் மாசித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அனைத்து சமூக காளியம்மன், குமாரபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் மாசித் திருவிழா நடைபெறவுள்ளது.

காளியம்மன் கோவிலில் பிப். 22ம் தேதியும், அனைத்து மாரியம்மன் கோவிலில் மார்ச் 1ம் தேதியும் பூச்சாட்டுதல் விழா நடைபெறவுள்ளது. மகா குண்டம் இறங்கும் பக்தர்கள், அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்தல் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற்றிட பிப்.22 முதல் மஞ்சள் ஆடை அணிந்து 15 நாட்கள் விரதமிருப்பார்கள்.

இதனால் நேற்று ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. திருவிழாவில் தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, அம்மன் திருக்கல்யாணம், வாண வேடிக்கை, மஞ்சள் நீர் திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!