குமாரபாளையம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: ஆயுதபூஜைை விற்பனை ஜோர்

குமாரபாளையம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: ஆயுதபூஜைை விற்பனை ஜோர்
X

குமாரபாளையம் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி நாளையொட்டி பொதுமக்கள் பூஜை சாமான், பூக்கள், பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது வழக்கம். இதனையொட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாழை மரங்கள் கடைகள், மாவிலை, பல வகையான பூக்கள், பழக்கடைகள், பொரி, கடலை கடைகள் உள்ளிட்ட பூஜை சாமான் கடைகள் அதிகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியே களை கட்டியுள்ளது. பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பூஜை சாமான் மற்றும் இதர பொருட்களை வாங்கினர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் எங்கள் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு நாங்கள் வாழ்வாதாரம் இழந்து நின்றோம். சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பூஜை சாமான் உள்ளிட்ட ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நாங்களும் எங்களுக்கு விதிக்கப்பட்ட அரசு விதிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை முகக் கவசம் அணியக் கூறியும், சமூக இடைவெளி விட சொல்லியும், கிருமிநாசினி பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறோம். எங்கள் பயமே மழை வந்திடுமோ என்பதுதான். ஆயுதபூஜை வியாபாரம் ஒருநாள் வியாபாரம் மட்டுமே நடைபெறும். ஆனால், மழை வந்துவிட்டால் வியாபாரமே ஏதுமில்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்