பள்ளிபாளையம் அம்மா உணவகத்தில் குவிந்த மக்கள் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனையொட்டி குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி அம்மா உணவகத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை காலை மதியம் வேலைகளில் உணவு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி நகராட்சியில் உணவு செலவுக்காக 2 லட்ச ரூபாய் நிதி அளித்திருந்தார். இந்நிலையில இன்று மதியம் பள்ளிபாளையம் புதன் சந்தை அம்மா உணவகத்தில் இலவச உணவினை பெற ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளிபாளையம் காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி உணவு வாங்கிச் செல்ல வழி ஏற்படுத்தினர். கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக விசைத்தறி தொழில் இயங்காததால் வறுமையில் வாடும் ஒரு பிரிவு தொழிலாளர்களும் இந்த உணவகத்தில் உணவு பெற வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu