குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்க பட்டாசு கடை திறப்பு

குமாரபாளையத்தில் அபெக்ஸ்  சங்க பட்டாசு  கடை திறப்பு
X

அபெக்ஸ் சங்கம் சார்பில், குமாரபாளையத்தில் பட்டாசு கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், முதல் விற்பனையை முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

குமாரபாளையத்தில், அபெக்ஸ் சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு கடை திறக்கப்பட்டுள்ளது.

சேவை திட்டப்பணிகள் செய்யும் அபெக்ஸ் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் பட்டாசு கடை நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு பட்டாசுக்கடை திறப்பு விழா, சங்க தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, ரிப்பன் வெட்டி, கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இதுபற்றி, சங்கத் தலைவர் பிரகாஷ் கூறியதாவது: அபெக்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்து வருகிறோம். இந்த சேவை பணிகள் தொடர்ந்து செய்திட, இந்த பட்டாசு கடை வருமானம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுதும் முழுக்க முழுக்க சேவைத் திட்டங்களுக்காக பயன்படுத்துகிறோம்.
எனவே, பொதுமக்கள் தாங்களும் சேவைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள, எங்களது அபெக்ஸ் சங்க பட்டாசு கடையில் பட்டாசு வாங்கி உதவ வேண்டுகிறோம். குமாரபாளையம் மற்றும் பல பகுதிகளில் உள்ள, அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பிடம், உணவு தயாரிக்கும் அறை உள்ளிட்ட பல கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளோம். தற்போது கலியனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கட்டிடம் கட்டித்தர பரிசீலனை நடைபெற்று வருகிறது. இங்கு, பட்டாசு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் சர்வதேச தலைவர் ஈஸ்வர், முன்னாள் தேசிய தலைவர் புருஷோத்தமன், மனோகர், கார்த்தி, சபரி, வெங்கடேஷ், பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!