சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
X

சிபிஎம் சார்பில் நடைபெற்ற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

குமாரபாளையம் காவிரி பாலம் பிரிவில் பாஜக அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க.அரசை கண்டித்து, குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் கண்டன மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் காவேரி நகர், காவிரி பாலம் பிரிவில் நகர செயலர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைபடுத்தப்பட்டோர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், ஊபா சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் சார்பில் ஜானகிராமன், சிவராஜ், சிவகுமார், முன்னாள் மதிமுக நகர செயலர் விஸ்வநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!