பள்ளிபாளையத்தில் சி.பி.எம் ஆர்ப்பாட்டம்- 13 பெண்கள் உள்பட 36 பேர் கைது

பள்ளிபாளையத்தில் சி.பி.எம் ஆர்ப்பாட்டம்-  13 பெண்கள் உள்பட 36 பேர் கைது
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

பள்ளிபாளையத்தில் சி.பி.எம். சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் மே 16ல் திருமணம் முடிந்து கோவிலுக்கு வழிபாட்டுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை வழிபாடு செய்ய முடியாமல் கோவில் வாசலில் தடுத்து நிறுத்திய ஆதிக்க சக்தியினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய கோரி சி.பி.எம் சார்பில் பள்ளிபாளையம் பஸ் நிலையம் பகுதியில் ஒன்றிய செயலர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.

அப்போது கட்சி ஊழியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி 13 பெண்கள் உள்பட 36 பேரை கைது செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் சட்டை போலீசாரால் கிழிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

Tags

Next Story