குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர கமிட்டி மாநாடு

குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர   கமிட்டி மாநாடு
X

குமாரபாளையத்தில் நடந்த சிபிஎம் நகர கமிட்டி மாநாட்டில்,  மாநில குழு உறுப்பினர் பாண்டி, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

குமாரபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி மாநாடு நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சி.பி.எம். நகர கமிட்டி மாநாடு நாடைபெற்றது. இதற்கு, நகரக்குழு உறுப்பினர்கள் காளியப்பன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை, மூத்த தலைவர் கந்தசாமி ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில், நான்கு ஆண்டு கால பணி அறிக்கையை, நகர செயலர் ஆறுமுகம் சமர்பித்தார்.

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட வேண்டும், சாயநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனே அமைக்க வேண்டும், ஆனங்கூர் பிரிவு சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும், சேலம் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும், அனைத்து ஏழை குடும்பத்தினருக்கு வீடு கட்டி தர வேண்டும், கட்டுமான பொருட்கள் வசிலி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், காவேரி நகர் அருந்ததியர் பகுதி மக்களுக்கு இலவச வீடுமனை கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story