பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன் சி.பி.எம். ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன் சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
X

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு சி.பி.எம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு சி.பி.எம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு சி.பி.எம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி நிர்வாகி சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு நிர்வாகி அசோகன், ஒன்றிய செயலர் ரவி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.

அக்ரஹாரம் ௧,௨,௩ வார்டுகளில் சேதமான வடிகால்களை சீர்படுத்தி தூர் வார வேண்டும். மயானம் பகுதி கழிப்பிடத்தில் உடைந்த கதவு, பீங்கான், பைப், மின் விளக்கு சேதமான கட்டுமான பணிகள் சீரமைத்து தர வேண்டும். மூன்றாவது வார்டில் தரமில்லா சாலை போட்டதால், அதனை மீண்டும் தரமான சாலையாக போட்டு தர வேண்டும்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை எனும் குடிநீர் விநியோகத்தை தினமும் விநியோக செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு மருந்து வாரம் இருமுறை அடிக்க வேண்டும். அக்ரஹாரம் பஸ் நிறுத்தம், ஊராட்சி பள்ளி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் கழிவுநீர், சாய நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிர்வாகிகள் சுந்தரம், பழனிச்சாமி, சண்முகசுந்தரம்,செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கிளை செயலர்கள் பெருமாள், தர்மராஜ், அருள்மணி, அண்ணாதுரை, கோவிந்தராஜ், ஆட்டோ முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future