குமாரபாளையத்தில் சி.பி.எம். கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

குமாரபாளையத்தில் சி.பி.எம். கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
X

குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி பேசினார்.

குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி பங்கேற்று பேசினார்.

அப்போது, வரும் 2022ம் பிப். 23 முதல் 28ம் தேதி வரை மதுரையில் சி.பி.எம். சார்பில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. எலச்சிபாளையத்தில் டிசம்பர் 15,16 ஆகிய இரு நாட்கள் நாமக்கல் மாவட்ட மாநாடு நடைபெறவுள்ளது. இந்த இரு மாநாடுகளிலும் நாம் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என பேசினார்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையை குறைத்து, பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலார்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, தொழில்வளம் காக்கவும், காவிரியின் தூய்மையையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், சி.ஐ.டி.யூ. நகர செயலர் பாலுசாமி, நகர கமிட்டி உறுப்பினர்கள் கந்தசாமி, மாதேஸ், சண்முகம், பெருமாள், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!