சி.பி.ஐ. முன்னாள் மாவட்ட செயலர் மறைவுக்கு மலரஞ்சலி

சி.பி.ஐ. முன்னாள் மாவட்ட செயலர்   மறைவுக்கு மலரஞ்சலி
X
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர், ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் மணிவேல் மறைவுக்கு குமாரபாளையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சி.பி.ஐ. முன்னாள் மாவட்ட செயலர்

மறைவுக்கு மலரஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர், ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் மணிவேல் மறைவுக்கு குமாரபாளையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர், ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் மணிவேல் உடல்நலமின்றி இறந்தார். இவரது மறைவுக்கு, குமாரபாளையம் எஸ் எம் எஸ். தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மணிவேல் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து, மலர்கள் தூவி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மணிவேலின் ஆக்கபூர்வமான பணிகள் குறித்து அனைவரும் நினைவு கூர்ந்து பேசினர். இதில் பஞ்சாலை சண்முகம் விடியல் பிரகாஷ், சவுந்திரராஜன், மனோகரன் ராம்கி உள்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

படவிளக்கம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர், ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் மணிவேல் மறைவுக்கு குமாரபாளையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story