மாடுகள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு :ஆய்வு செய்த மத்திய அதிகாரி

மாடுகள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு  :ஆய்வு செய்த மத்திய அதிகாரி
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த மாடுகள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரது பாதுகாப்பு குறித்து மத்திய அதிகாரி மிட்டல் நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த மாடுகள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரது பாதுகாப்பு குறித்து மத்திய அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 600 மாடுகள் பங்கேற்க, 400 மாடிபிடி வீரர்களும் பங்கேற்றனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஷ்குமார், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், ஆர்.டி.ஒ. இளவரசி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டி குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கர்நாடக மாநில விலங்குகள் நல வாரிய டாக்டர் மிட்டல் ஜல்லிக்கட்டு நடந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

இந்த போட்டியில் 6 மாடுகள் காயமடைந்ததாகவும், 65 மாடுபிடி வீரர்கள் லேசான காயமடைந்தனர் எனவும், 19 வீரர்கள் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்,

திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி, தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ. தியாகராஜன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மத்திய அரசு அதிகாரியிடம் எடுத்துரைத்தனர். முன்னதாக டாக்டர் மிட்டலை ஆர்.டி.ஒ, உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வரவேற்றனர்.

Tags

Next Story