குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் வழிபாடு
X

குமாரபாளையம் கோ சாலையில் மாட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை ஆனந்தாஸ்ரம வளாகத்தில் திருநணா கோ சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 8 பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

மாட்டுப்பொங்கல் திருநாளில் இவைகள் குளிக்க வைக்கப்பட்டு, சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளுக்கு வர்ணமிட்டு, அலங்கரிக்கபட்டது. அனைத்து பசுமாடுகளுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

பவானி, சங்கமேஸ்வரர் திருக்கோவில் சிவனடியார் கூட்டத்தின் தலைவர் தியாகராஜன் பங்கேற்று, பசுமாடுகளுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். சிவனடியார்கள் பக்தி பாடல்கள் பாடினார்கள். இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!