குமாரபாளையம் போலீசார் சார்பில் கபசுர குடிநீர்

குமாரபாளையம் போலீசார் சார்பில்     கபசுர குடிநீர்
X
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர பானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் போலீசார் சார்பில் பொது மக்களுக்கு கபசுர பானம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொடர்ந்து தினந்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணில் நீடித்து வருகிறது.

இதற்கிடையே தொற்று ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில் போலீசார் கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கபசுர குடிநீர் குடிப்பதால் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கபசுர குடிநீர் குடிப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்த நோய் தாக்குதலில் இருந்தும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். அதனால், பொது மக்கள் தொடர்ந்து கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று குமாரபாளையம் போலீசார் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture